Advertisement

700 பேருடன் கொச்சிக்கு வந்து சேர்ந்தது

பொது மே 10,2020 | 13:32 IST

Share

கொரோனா வைர-ஸ் பரவலை தடுக்க பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியதால் 698 இந்தியர்கள் மாலத்தீவில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டு வர கடற்படையின் ஐ.என்.எஸ். ஜலசேவா கப்பல் சென்றது. 698 பேரையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கப்பல், ஞாயிறு காலை கேரளாவிலுள்ள கொச்சி துறைமுகத்தை வந்தடைந்தது. மீட்கப்பட்டவர்களில் கேரளாவை சேர்ந்த 440 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 187 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த 45 பேர், தெலங்கானாவைச் சேர்ந்த 9 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 8 பேர் உள்ளனர். ஹரியானா, இமாச்சல் பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், லட்சத்தீவு, கோவாவைச் சேர்ந்தவர்களும் அடக்கம். 19 கர்ப்பிணிப் பெண்களும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது. அனைவருக்கும் கொச்சியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகு 14 நாட்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதிக்கப்படுவர் என கொச்சி மாவட்ட நிர்வாகம் கூறியது. மாலத்தீவில் இருந்து 200 இந்தியர்களுடன் புறப்பட்ட 2வது கடற்படை கப்பல் ஐஎன்எஸ் மகர் ஞாயிறு மாலை தூத்துக்குடிக்கு வந்து சேருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X