Advertisement

அசத்திய இந்திய நிறுவனம்

பொது மே 12,2020 | 09:28 IST

Share

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஜி.சி.சி பயோடெக் இந்தியா நிறுவனம். இவர்கள் கொரோனா சோதனைக்கு ரூ.500 மட்டுமே செலவாகும் சோதனை கருவியை உருவாகியுள்ளனர். இரண்டு மாத கால ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலுக்கு பிறகு இந்த கிட்டை உருவாக்கியுள்ளனர். இதில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் அனைத்தும் சொந்த தயாரிப்பு என்பதால், மலிவான விலையில் உருவாக்க முடிவதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.மஜீம்தார் கூறினார். 90 நிமிடங்களில் கொரோனா சோதனையை இந்த கருவி செய்து முடிக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் அளித்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காக டெஸ்ட் கிட் காத்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு ஒரு கோடி கருவிகளை உருவாக்கும் திறன் இருப்பதாக மஜீம்தார் தெரிவித்தார். தனியார் சோதனை நிலையத்தில் கொரோனா சோதனைக்கு 4500 ரூபாய் வரை செலவாகும் நிலையில். இந்த கிட் சோதனை அதிகரிக்க உதவும். சோதனைகள் அதிகரிக்கும் பொது நோயாளிகள் வேகமாக கண்டுபிடிக்கபடுவர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X