Advertisement

அரசை துவச்சி தொங்கவிட்ட ஐகோர்ட்

பொது மே 12,2020 | 13:27 IST

Share

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டுமென மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மதுக்கடைகளை மூட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது; அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அரசு முறையிட்டுள்ளது; அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு வக்கீல் வாதிட்டார். மே 7 ம்தேதி ஒரு நாளில் மட்டும் மது குடித்த 10 பேர் இறந்துள்ளனர். மதுவால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது; இது, கொரோனா பரவ வழிவகுக்கும் என்பதால் மதுக்கடையை திறக்க தடை கேட்கிறோம் என மனுதாரர் தரப்பு வக்கீல் சொன்னார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X