Advertisement

தெலங்கானாவில் அரசு சொல்படிதான் விவசாயம்

பொது மே 13,2020 | 14:57 IST

Share

விளைந்த பயிரை விற்கப்போகும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை; காரணம் அளவுக்கதிகமான உற்பத்தி. இன்னொரு புறம், சில விவசாய விளைபொருட்களை வாங்க முடியாத அளவுக்கு விலை விண்ணை முட்டுகிறது. காரணம் குறைந்த உற்பத்தி. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முற்பட்டிருக்கிறார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். இனிமேல் அரசாங்கம் சொல்லும் பயிரைத்தான் விவசாயிகள் பயிரிட வேண்டும் என அறிவித்திருக்கிறார், கே.சி.ஆர். ஒரு பயிரை எப்போது பயிரிட வேண்டும்; எவ்வளவு நிலப்பரப்பில் பயிரிட வேண்டுமென்ற கட்டுப்பாடுகளையும் அவர் கொண்டு வந்துள்ளார். 50 லட்சம் ஏக்கரில் நெல், 50 லட்சம் ஏக்கரில் பருத்தி, 10 லட்சம் ஏக்கரில் துவரை பயிரிட வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த பயிரை எந்த பகுதியில் பயிரிட வேண்டுமென்ற அறிவிப்பும் மிக விரைவில்வெளியாகவுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட மாட்டாது. ரிது பந்து திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் rythu bandhu வழங்கப்படும் 10,000 ரூபாய் உதவித்தொகையும் கிடைக்காது என அதிரடியாக அறிவித்துள்ளார். அதாவது அரசின் பேச்சை கேட்காத விவசாயிக்கு எந்த சலுகையும் கிடைக்காது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X