Advertisement

தினம் ஒரு லட்சம் செய்வது இலக்கு

பொது மே 15,2020 | 10:30 IST

Share

மே 14ம் தேதி வரை நாடு முழுவதும் 20 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1ம் தேதி வரை 38,914 ஆக மட்டுமே இருந்தது. 339 அரசு லேப் மற்றும் 145 தனியார் லேப்களில் இந்த சோதனை செய்யப்படுகிறது. தற்போது தலா 10 லட்சம் மக்கள் தொகையில் 1540 பேருக்கு சோதனை செய்யப்படுகிறது. இது மார்ச் மாதம் வெறும் 95 பேராக இருந்தது. ஆனால் இது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. 10 லட்சம் பேரில் அமெரிக்காவில் 31 ஆயிரம் பேருக்கும், ரஷ்யாவில் 43 ஆயிரம் பேருக்கும், இத்தாலில் 45 ஆயிர பேருக்கு சோதனை செய்யப்படுகிறது. ஜூலை இறுதி வரை தேவைப்படும் சோதனை கருவிகள் கையிருப்பு இருப்பதாகவும், இறக்குமதிகளை குறைத்து இந்திய உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி வருவதாக சுகாதாரதுறை செயலாளர் சி.கே.மிஷ்ரா தெரிவித்தார். மேலும் சுய சார்பு கொள்கை மூலம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் சோதனை கருவிகள் உற்பத்தியாகி வழிவகைசெய்யப்பட்டுள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை 33.6% அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான வளர்ச்சி. மரணமடைவோர் எண்ணிக்கை 3.2% உள்ளது. 3% நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. சோதனைகளின் எண்ணிக்கையை நாள் ஒன்றுக்கு 1 லட்சமாக உயர்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 14 மாநிலங்களில் புதிய தொற்று கண்டறியப்படவில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X