Advertisement

காஞ்சி மாவட்டத்தில் திங்கள் முதல் அமல்

பொது மே 15,2020 | 20:30 IST

Share

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பல பகுதிகளில் நடந்தது. சாலைகளில் முகக் கவசம் அணியாமல்சென்ற பொதுமக்களுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா முகக்கவசங்களை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன்பிறகு கலெக்டர் பேட்டியளித்தார். வரும்17 ஆம் தேதி வரை அரசு சார்பில் மாவட்டம் முழுவதும் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. 18ம் தேதிக்கு பிறகு முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X