Advertisement

டாக்டர்கள் அட்வைஸ்

பொது மே 16,2020 | 16:30 IST

Share

சீனாவில் கொரோனா முதலில் பரவத் துவங்கிய வூஹான் நகரைச் சேர்ந்தவர் ஜாங் பிங். Zhang Ping 26 வயது நிரம்பிய வாலிபர். காலையில் எழுந்ததும் ஜாகிங் போனார். வூஹானில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதால் அதையும் தவறாமல் செய்தார். 2 மாத ஊரடங்குக்குப் பிறகு முதல்முறையாக ஜாகிங் போவதால் வழக்கமாக 3 கிலோ மீட்டர் ஓடுபவர், அன்று 6 கிலோ மீட்டர் ஓட முடிவு செய்தார். பாதி தூரம் ஓடும்போதே அவருக்கு ஒரு மாதிரி மூச்சு முட்டுவது மாதிரி ஒரு ஃபீலிங். சம்திங் ராங்னு நினைச்சவர், ஜாகிங்கை பாதியில் விட்டு வீட்டுக்கு வேகமாக போனார். வீடு போய்ச்சேர்ந்த உடனே நெஞ்சு வலி ஏற்பட்டது. குடும்பத்தினர் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆபரேஷனுக்குப்பிறகு ஜாங்கின் உடல்நிலை சீரானது. கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். ஜாகிங் சென்றபோது ஜாங்கின் வாய் மற்றும் மூக்கை மாஸ்க் இறுக்கமாக மூடியதால் நுரையீரலுக்கு ஆக்சிஜன் போவது தடைபட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது என டாக்டர்கள் கூறினர். நுரையீரல்பிரச்னை உள்ளவர்கள் மாஸ்க் அணியும்போது அதிக கவனத்துடன் இருப்பது நல்லது; முகக்கவசத்தை இறுக்கமாக அணிந்து ரன்னிங் செல்ல வேண்டாம்; முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்யலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X