Advertisement

நிலத் தகராறில் வன்முறை

பொது மே 16,2020 | 18:30 IST

Share

நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியம். இவரும், இவரது மகன்கள் 38 வயது ராஜா, 35 வயது தினகரன் ஆகியோர் கும்பலாக வந்து, நெல்லை கருங்குளத்தில் உள்ள 9 ஏக்கர் நிலத்தில் அத்து மீறி நுழைந்து, மகளை அவமானப்படுத்தியதாக, வள்ளியூர், சங்கனாபுரத்தை சேர்ந்த குமாரி பகவதி என்பவர் பழவூர் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட எஸ்.பி.,ஓம்பிரகாஷ் மீனாவிடம் புகார் மனு அளித்தார். சம்பவம் குறித்து பழவூர், பணகுடி, வள்ளியூர் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் செய்தோம். ஆன்லைனில் புகார் செய்தும், போலீசார் வழக்குபதிவு செய்யவில்லை என, மனுவில் குறிப்பிட்டிருந்தார். எஸ்.பி., உத்தரவின் பேரில், தி.மு.க.,எம்.பி.,ஞானதிரவியம் , மகன்கள் ராஜா, தினகரன் மற்றும், ஆவரைகுளம் மனோகர் உட்பட 14 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலகம் செய்யும் விதத்தில் சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதங்கள் வைத்திருத்தல், ஆபாசமாக நடந்து கொள்ளுதல், காயப்படுத்துதல், பெண்மைக்கு குந்தகம் விளைவித்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், துப்பாக்கி காட்டி மிரட்டுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகிய சட்டங்களின் கீழ், பழவூர் போலீசார் வழக்கு பதிந்தனர். கொடுங்காயம் மற்றும் ஆயுதங்கள் வைத்திருத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளதால், அனைவரும் கோர்ட்டில் ஆஜராகியே ஜாமின் பெறமுடியும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X