Advertisement

கொரோனாவால் சோதனை மேல் சோதனை

பொது மே 16,2020 | 19:00 IST

Share

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட கோவிட் சர்ஜ் கொலாபரேட்டிவ் covidsurgcollaborative என்ற மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. கொரோனாவால் ஏற்கனவே தேதி குறிக்கப்பட்ட அறுவைச் சிகிச்சைகளின் நிலை என்ன என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 71 நாடுகளில் உள்ள 359 மருத்துவமனைகளில் பணியாற்றும் பல ஆயிரம் அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த 12 வார காலத்தில் உலகம் முழுக்க 3 கோடி அறுவைச் சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டு, தேதிஒத்தி போடப்பட்டுள்ளன. இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் மட்டும் 6 லட்சம் ஆபரேஷன்கள் ரத்தாகியுள்ளன. இனியும் மருத்துவமனைகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டால் உலகம் முழுக்க ஒவ்வொரு வாரமும் 25 லட்சம் ஆபரேஷன்கள் ரத்தாகும் அபாயம் உள்ளது என்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட டாக்டர்கள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X