Advertisement

மரணத்தில் முந்துகிறது அமெரிக்கா

பொது மே 18,2020 | 09:26 IST

Share

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 95 ஆயிரத்தை தாண்டி போய் கொண்டிருக்கிறது. மூவாயிரம் பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளனர். நோய் வந்து அதில் இருந்து குணம் அடைந்தவர்கள் 35,000 பேர். உலகம் முழுக்க இதுவரை 48 லட்சம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். அது 3 லட்சத்து 10 ஆயிரம் பேரின் உயிரை குடித்து விட்டது. பதினெட்டரை லட்சம் பேர் தப்பி பிழைத்தனர். உலகின் ஒரே வல்லரசான அமெரிக்கா தொடர்ந்து அதிகபட்ச இழப்பை சந்திக்கிறது. 15 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு, 91 ஆயிரம் பேரை பலி கொடுத்துள்ளது அந்த நாடு. திக்கு முக்காடிய இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளில் இப்போது நிலைமை பரவாயில்லை. இங்கிலாந்தில் 34,636 இத்தாலியில் 31,908 ஸ்பெயினில் 27,650 இதுவரை இறந்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X