Advertisement

மதுரை ரயில் நிலையத்தில் சோகம்

பொது மே 19,2020 | 10:56 IST

Share

தென் மாவட்டங்களில் வசித்த வெளி மாநில தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அவர்களை அனுப்பும் பணியில் மதுரை கலெக்டர் மும்முரமாக இருக்கிறார். தனி ரயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, முக கவசங்களுடன் பயணிகள் ஏற்றப்பட்டனர். முன்னதாக அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மதுரை 1,315, தேனி 174, விருதுநகர் 115 உள்பட ஆயிரத்து 650 பேர் சிறப்பு ரயிலில் சென்றனர். அரசு கொடுத்த உணவு, மருந்து, தண்ணீருடனும் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையில் உருவான கண்ணீருடனும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்ட காட்சி உருக்கமாக இருந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X