Advertisement

கொரோனா பெயரில் ஸ்மார்ட் போன் வைரஸ்

பொது மே 20,2020 | 09:56 IST

Share

கொரோனா அப்டேட் லிங்க் என்ற பெயரில் எஸ்.எம்.எஸ்., மூலம் ஸ்மார்ட் போன்களுக்கு 'செர்பெரஸ்' Cerberus என்ற மொபைல் வைரைஸ ஹேக்கர்கள் அனுப்புவதாக சி.பி.ஐ., எச்சரித்துள்ளது. குறுந்தகவலில் வரும் இந்த லிங்க்கை கிளிக் செய்தால், அதில் உள்ள 'செர்பெரஸ்' வைரஸ் தன்னிச்சையாக ஸ்மார்ட்போனில் புகுந்து வங்கி கணக்கு விபரங்கள், பாஸ்வேர்டுகள், கிரெடிட் கார்டு தகவல்கள் உள்ளிட்ட தரவுகளை திருடி விடும். வங்கி சாப்ட்வேர் போல இரு முறை அங்கீகரிக்கும் அம்சங்களுடன் குறுந்தகவல் வருவதால், பலர் ஏமாந்து விடுகின்றனர். இதனால், குறுந்தகவலில் வரும் எந்த இணைப்பையும் 'கிளிக்' செய்ய வேண்டாம் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X