Advertisement

மதுரை போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி

பொது மே 21,2020 | 09:57 IST

Share

மதுரை சிட்டி போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம். பேஸ்புக்கை ஊறுகாய் மாதிரிதான் அப்பப்ப கமிஷனர் பயன்படுத்திட்டிருக்கார். அப்படியே பதிவு போட்டாலும் ரெண்டு, மூணு வரில தான் இருக்கும். சமூகத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டது போல, சமீபகாலமாக, இவரது பேஸ்புக்கில் பதிவுகள் வெளியானது. நமக்கே தெரியாம, யார் போட்டிருப்பாங்கனு பார்த்த, கமிஷனர் ஷாக் ஆயிட்டார். அவர் பெயர், யூனிபார்ம்ல இருக்கற போட்டோவோட, யாரோ ஒருத்தன், பேக்(fake id) ஐ.டி ஓப்பன் பண்ணிருக்கான். சில நிருபர்கள் கூட ஆரம்பத்துல இந்த ஐ.டி.ய நம்பி ஏமாந்ததா சொல்லிக்கிறாங்க. சுதாரிச்ச கமிஷனர், இது போலி. யாரோ சிலர் போலி பேஸ்புக் துவங்கிருக்காங்க. இது சட்டப்படி குற்றம். அந்த கிரிமினலோட 'சாட்' பண்ணாதீங்கனு தெரிவிச்சிருந்தார். இதுகுறித்து, நிருபர்களிடம் கூறியது: அமெரிக்காவில் இருந்து போலி பேஸ்புக் துவங்கியதாக தகவல் வந்திருக்கு. சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கோம் என்றார். இது தொடர்பாக பேஸ்புக்கிலும் பதிவிட்டிருக்கார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X