Advertisement

கிராமத்துக்கே ஒரே சமையல்

பொது மே 21,2020 | 17:25 IST

Share

கோவை, காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கிறது கெத்தைக்காடு. இருளர் இனமக்கள் வசிக்கும் கிராமம். ஊரடங்கால், இந்த மக்களுக்கு வேலை இல்லாமல் போனது. வருமானமும் இல்லை. பேருந்துகளும் இயங்காததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதையறிந்து தன்னார்வலர்கள் ஒன்றிணைத்து மலைக்கிராம மக்களுக்கு உதவ சமுதாய சமயலறை திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். அந்த கிராமத்திற்கு சமைக்கும் அளவுக்கு அரிசி, மளிகை, காய்கறிகளை தன்னார்வலர்கள் கொண்டு வந்து கொடுக்கின்றனர். அதைபயன்படுத்தி, கிராம மக்களே ஒரே இடத்தில் சமைத்தும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் பசியாற்றி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X