Advertisement

தமிழ்நாட்டில் எகிறும் எதிர்பார்ப்பு

பொது மே 21,2020 | 17:57 IST

Share

இந்தியாவில் முதல் மாநிலமாக மே 15ல் பஸ் சேவையை அரியானா தொடங்கியது. அதன்பின், பஞ்சாப், குஜராத், கர்நாடகாவை தொடர்ந்து, வியாழனன்று அந்திராவிலும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 436 வழித்தடங்களில் 1,683 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சமூக விலகலை கடைபிடிக்க ஏதுவாக பஸ்களின் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்குள் மட்டுமின்றி, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பேருந்துக்கு 20 முதல் 30 பயணிகள் அனுமதிக்கப்படுவர். மாஸ்க் அணிவதும், சானிடைசரில் கைகளை சுத்தப்படுத்துவதும் கட்டாயம். 58 நாட்கள் பஸ்கள் நிறுத்தப்பட்டதால், ஆந்திரா போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 1200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. கண்டக்டர்கள் இருக்க மாட்டார்கள். டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்ய பயணிக்கலாம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X