Advertisement

தாலி கட்டியதும் தனிமை

பொது மே 24,2020 | 20:28 IST

Share

சேலம், கெங்கவல்லியை சேர்ந்த இளம்பெண் சென்னையில் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்காக 21ம் தேதி சேலத்திற்கு வந்தார். நத்தக்கரை சோதனைச்சாவடியில் அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டார். இந்நிலையில், ஞாயிறன்று அந்த பெண்ணுக்கு வீட்டிலேலேயே எளிய முறையில் திருமணம் நடந்தது. ஒரு சிலரே திருமணத்தில் பங்கேற்றனர். இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு கொரோனா உறுதியானதாக கூறப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று, மணப்பெண்ணை தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மணமகன் அவரது வீட்டிற்கு திரும்பி சென்றார். திருமணத்தில் பங்கேற்றவர்களையும் அவரவர் வீட்டில் தனிமையில் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X