Advertisement

குடும்பத்துடன் வீடுகளில் தொழுகை

பொது மே 25,2020 | 10:27 IST

Share

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகை ரம்ஜான். இதை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். விசாலமான திறந்த வெளியில் ஏராளமான முஸ்லிம்கள் குழந்தை குட்டிகளுடன் புத்தாடையில் வந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்பார்கள். குறிப்பாக, நாகூரில் ரம்சான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இப்போது ஊரடங்கால், ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்கா உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. எனினும், ரம்சானை முன்னிட்டு நாகூர் தர்காவின் நான்கு வாசல்களிலும் திரண்ட முஸ்லிம்கள் இடைவெளி பின்பற்றி தொழுகை செய்தனர். பெரும்பாலான முஸ்லிம்கள், வீடுகளில் இருந்தபடி குடும்பத்தினருடன் தொழுகை செய்து, ரமலான் நோன்பு நிறைவு செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X