Advertisement

10,000 கொடுத்து வாங்கிய கணவன் கைது

சம்பவம் மே 25,2020 | 10:55 IST

Share

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் சூரஜ். 26 வயது. இரண்டு வருடம் முன்பு திருமணம் செய்தார். மனைவி பெயர் உத்ரா. வயது 23. சென்ற வருடம் மகன் பிறந்தான். பிப்ரவரி மாதம் உத்ராவை பாம்பு கடித்தது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சிகிச்சை அளித்தனர். உடல் நிலை சரி ஆனது. கடந்த 6 ஆம் தேதி மீண்டும் பாம்பு கடித்து, உத்ரா வாயில் நுரை தள்ளி பரிதாபமாக இறந்தார். . மாடியில் அதுவும் ஏசி அறையில் பாம்பு எப்படி வந்தது என்று அவரது பெற்ரோருக்கு சந்தேகம். போலீசில் புகார் கொடுத்தனர். கணவன் சூரஜிடம் முதலில் விசாரித்தனர். அவரது செல்போனை செக் பண்ணினர். உத்ரா சாவுக்கு முந்தைய நாள் வரை ஒரு நம்பருக்கு அடிக்கடி சூரஜ் கால் போட்டு பேசியது தெரிந்தது. அந்த நம்பர் அடூரை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தம் என தெரிந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X