Advertisement

தமிழக கஸ்டமர்கள் திரும்பி ஓட்டம்

பொது மே 25,2020 | 12:27 IST

Share

புதுச்சேரியில் கிடைக்கும் 920 வகையான மது வகைகளில், 154 மது வகைகள் தமிழகம் ,புதுச்சேரியில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படாத மது வகைகளுக்கு விற்பனை விலையில் இருந்து 25%கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. 240 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிராண்டி ஒரு புல் 677 ரூபாய் 895 ரூபாய்க்கு விற்கப்பட்ட விஸ்கி 1240 ரூபாய் 660 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரம் 960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடை வாசலில், இடைவெளியுடன் காத்திருந்த கஸ்டமர்கள் விலை அதிம்தான் என்ன செய்வது என புலம்பிக்கொண்டே வாங்கி சென்றனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் வரிசையில் நிற்க முடியாதவர்கள் செருப்புகளை வட்டத்திற்குள் வைத்துவிட்டு நிழலானா இடத்தில் காத்திருந்தனர். மாநில எல்லை பகுதியான திருக்கனூரில் தமிழகத்திலிருந்து வந்த கஸ்டமர்கள் விலை அதிகரிப்பை தெரிந்தவுடன், தமிழகத்திலே விலை கம்மியாதான் இருக்கு அங்கையே வாங்கிக்கிறோம் என கூறிவிட்டு சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X