Advertisement

25% தொழிலாளர்களுடன் ஒர்க் ஸ்டார்ட்

பொது மே 25,2020 | 19:27 IST

Share

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்று அம்பத்தூர் தொழிற்பேட்டை. 2,000 கம்பெனிகள் உள்ளன. 60,000 பெண்கள் உட்பட 2 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். ஆண்டுக்கு 2,500 கோடி வர்த்தகம் இங்கு நடக்கிறது. ஊரடங்கு காரணமாக 60 நாட்களாக மூடப்பட்டிருந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்று 25 சதவீத பணியாளர்களுடன் இயங்க துவங்கியது. தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணிகளை துவங்கினர். போக்குவரத்து வசதிகள் இல்லாததால் உள்ளூர் தொழிலாளர்களால் பணிக்கு வர முடியவில்லை. வௌிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் தொழிற்பேட்டையில் தொடர்ந்து தங்கியிருக்கும் தொழிலாளர்களை கொண்டு நிறுவனங்கள் இயங்க துவங்கியுள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X