Advertisement

படிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை

பொது ஜூன் 05,2020 | 13:50 IST

Share

மதுரை மேலமடையை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி நேத்ரா. முடி வெட்டும் தொழில் செய்து வரும் தந்தை மோகன், மகளுக்காக 5 லட்சம் சேர்த்து வைத்திருந்தார். மகளை ஐ.ஏ.எஸ் ஆக்கி பார்க்க வேண்டும் என்பது இவர் கனவு. ஊரடங்கு காரணமாக தன் ஊரில் ஏழைகள் பலர் பசியால் வாடியை பலரை பார்த்தார் நேத்ரா. நொந்துபோனார். எப்படியாவது அவர்களுக்கு உதவ வேண்டும் நினைத்தார் . அவர்களுக்கு உதவ வேண்டும் என தந்தையிடம் அடம்பிடித்தார். மகளின் நல்லெண்ணத்தை புரிந்து கொண்டு மகளின் படிபுக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயில் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அப்பகுதி மக்களின் பசியை, போக்கினார். மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மோகனின் சேவையை பாராட்டினார். நேத்ராவை ,ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை நியமித்தது. ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கியது . வறுமை ஒழிப்பு தொடர்பாக, ஐ.நா மாநாட்டில் பேசுவதற்கு நேத்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X