Advertisement

முதியவருக்கு நேர்ந்த அவலம்

பொது ஜூன் 07,2020 | 18:57 IST

Share

மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த 80 வயதான லட்சுமி நாராயணனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஷாஜாபூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். முதியவரின் சிகிச்சைக்காக, உறவினர், 11 ஆயிரம் ரூபாய் கட்டியிருந்ததாக தெரிகிறது. ஆனால், டிஸ்சார்ஜ் செய்யும்போது, மேலும், 11 ஆயிரம் ரூபாயை கட்ட சொல்லியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். உறவினரிடம் பணம் இல்லாததால் செய்வதறியாது தவித்தார். வருமானமே இல்லாத கொரோனா காலத்தில் உடனடியாக பணத்தை ஏற்பாடும் செய்ய முடியவில்லை. பணம் கட்ட தவறியதால், முதியவரை டிஸ்சார்ஜ் செய்ய மறுத்த மருத்துவமனை நிர்வாகம், வெளியேறாமல் இருக்க முதியவரின் கை,கால்களை கட்டிலோடு சேர்த்து கயிற்றால் கட்டிவைத்தது. விஷயம் அறிந்த முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முதியவருக்கு எலக்ட்ரோலைட் சமநிலையில் இல்லை. அவர் தடுமாறி விழாமல் இருக்கத்தான் கட்டி வைத்ததாக மருத்துவமனை விளக்கம் கூறியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X