Advertisement

3 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்தார்

பொது ஜூன் 10,2020 | 09:56 IST

Share

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திமுக எம்எல்ஏ அன்பழகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்தார். 61 வயதாகும் அன்பழகன், பல்வேறு இடங்களுக்கு சென்று கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். காய்ச்சல் ஏற்பட்டதால், மே 4 ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூச்சுத்திணறலால், அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததோடு ரத்த அழுத்தமும் இருந்ததால், தீவிர கண்காணிப்பில் இருந்தார். முதல்வர் பழனிசாமி அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார். உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தார். திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். ஆக்ஸிஜன் அளவு சீராகி, தானாக சுவாசிக்கும் நிலைக்கு வந்த அன்பழகனின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. சிகிச்சை பலனின்றி, இன்று காலை 8 மணிக்கு இறந்ததாக மருத்துமவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர், ஏற்கனவே 2001 மற்றும் 2011 ல் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எம்.எல்.ஏ. ஒருவர் பலியானது, அவருடன் பழகிய பிற எம்.எல்.ஏ.க்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவருக்கு 62வது பிறந்தநாள் அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பிற கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X