Advertisement

6 நாட்களில் 44,000 கோடி சம்பாதித்த மத்திய அரசு!

பொது ஜூன் 14,2020 | 10:00 IST

Share

பெட்ரோல், டீசல் விலை உயர்வால், கடந்த 6 நாளில் மட்டும் மத்திய அரசு ரூ.44 ஆயிரம் கோடி சம்பாதித்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறி இற்ங்குவதால், அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயிக்கலாம் என்று எண்ணெய் கம்பெனிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இந்திய கம்பெனிகள் பொதுமக்களுக்கு விலையை குறைக்கவில்லை. மாறாக, கடந்த 7 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்படுகிறது. இதனால் 6 நாட்களில் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.44 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது, அடிப்படை விலையில் பெட்ரோலுக்கு 270%, டீசலுக்கு 256% வரி வசூல் நடக்கிறது என கேர் ரேட்டிங் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் வாட் வரி 19%, ஜப்பானில் 47%, பிரிட்டனில் 62%. ஆனால் இந்தியாவில் தான் 69% வாட் வரி வசூலிக்கப்படுகிறது என காங்கிரஸ் தொடர்பாளர் கபில் சிபல் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X