Advertisement

நல்ல அறிகுறி என்கிறது அரசு

பொது ஜூன் 15,2020 | 11:11 IST

Share

கொரோனா வைரஸ் பரவுவது வேகம் பிடித்தாலும், அதில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இப்போது 50 சதவீதத்தை தாண்டி விட்டது. உரிய நேரத்தில் நோயை கண்டுபிடித்து, முறையான சிகிச்சை அளித்த காரணத்தால் மீண்டவர்கள் விகிதம் 31 ல் இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று 51 சதவீதத்தை எட்டியதாக சுகாதார அமைச்சகம் கூறியது. இது உலக அளவில் சராசரி மீட்பு விகிதத்துக்கு சமமானது. எல்லா நாடுகளையும் சேர்த்து 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 41 லட்சம் பேர் குணமாகி உள்ளனர். குணம் அடைவதில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 94 சதவீதம் பேர் மீண்டுள்ளனர். ஜெர்மனி 92 சதவீதம், தென் கொரியா 88 சதவீதம், இத்தாலியில் 74 சதவீதம் மீண்டுள்ளனர். பாதிப்பில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில்தான் குணமடைந்தவர்கள் குறைவு. அங்கு 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 9 லட்சம் பேர் குணம் அடைந்தனர். இது 40 சதவீதம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X