Advertisement

பதிலடி நிச்சயம்! பிரதமர் மோடி சபதம்!

அரசியல் ஜூன் 17,2020 | 18:57 IST

Share

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் பிரதமர் மோடி விவாதித்தார். எல்லையில் நடந்த சண்டையில் 20 வீரர்கள் பலியானதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரதமரும் முதல்வர்களும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு மோடி பேசியதாவது: இந்தியா அமைதியை விரும்பும் நாடு.அண்டை நாடுகளுடன் எப்போதும் நட்புறவை பேணவே விரும்புகிறோம். அதேநேரத்தில் நாட்டின் ஒருங்கிணைப்பிலும் இறையாண்மையிலும் எந்த சமரசத்தையும் இந்தியா செய்து கொள்ளாது. தியாகமும், வீரமும் இந்தியர்களின் இயல்பு; எந்த நாட்டையும் தூண்டி விட மாட்டோம்; யாராவது சீண்டினால் சரியான பதிலடி கொடுக்கும் ஆற்றலும் வலிமையும் எங்களுக்கு உண்டு. அதை பல முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். இதில் சந்தேகம் தேவையில்லை. நமது வீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது என்று மோடி கூறினார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

rasheed
rasheed , . 18-ஜூன்-2020 | 21:52:48 IST Report Abuse

honoble. p. m. news. my heart. pain. very very lass. india.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X