Advertisement

மதுரையில் மூன்று வக்கீல்களின் ஜாமின் தள்ளுபடி

பொது ஜூன் 23,2020 | 18:30 IST

Share

ஜெயப்பிரகாஷ்க்கு இப்போ 27 வயசு. ஆனா அஞ்சு வயசு பையனுக்கு உரிய அறிவு தான் இருக்குது. சென்னை ஓ.என்.ஜி.சி. கார்ப்பரேஷன் அதிகாரி வசந்தகுமாருக்கும், மனைவி பத்மினிக்கும் பிறந்த பிள்ளை தான் ஜெயப்பிரகாஷ். பிறவியிலேயே மூளை வளர்ச்சி குறைவு. யாராவது ஒருத்தர் கூடவே இருந்து அவனை கண்காணிக்கணும். வசதிக்கு குறைவில்ல. பையனோட 16 வயசுல, மனைவி இறந்து போயிர்றாங்க. அதுக்கப்புறம் பியூட்டி பார்ல வேலை பார்த்த ராஜேஸ்வரியோட வசந்தகுமாருக்கு பழக்கம் ஆயிருச்சு. மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி விதவை. மகன் செந்தில்குமார், மகள் மீனாவுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணி கொடுத்திட்டாங்க. மதுரையில வசந்தகுமாருக்கு ஒரு வீடு இருக்கறதால, ராஜேஸ்வரிக்காக மதுரையில் செட்டிலாகுறார். 2014ல் ராஜேஸ்வரிய, ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டார். சென்னையில உள்ள மூணு சொத்துக்களையும் மகன் பெயருக்கு உயில் எழுதி வச்சுட்டார். ஒரே வீட்டில் வசந்தகுமார், மகன் ஜெயப்பிரகாஷ், ராஜேஸ்வரி வாழ்ந்தாங்க. இதுக்கிடையில, வேறு ரெண்டு சொத்துக்களை வாங்கி ராஜேஸ்வரி பெயருக்கு உயில் எழுதி வச்சுருக்கார். தன்னோட வீட்டையும் ராஜேஸ்வரி பெயருக்கே மாத்திட்டார். ரீமேரேஜ் பண்ணின ரெண்டு வருஷத்துல வசந்தகுமாரும், அடுத்த வருஷம் ராஜேஸ்வரியும் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. ராஜேஸ்வரியோட முதல் கணவர் மகளான மீனா, தன் குடும்பத்தினரோடு சேர்த்து ஜெயப்பிரகாைஷ கவனிச்சுகிட்டு அந்த வீட்லயே வாழ்ந்தாங்க. இந்த நிலையில, அவங்கள வீட்டை காலி பண்ணச் சொல்லி, ஒருவர் வர்றாரு. அப்போ தான், ராஜேஸ்வரியோட மகன் செந்தில்குமாரின் வில்லத்தனம் தெரிய வருது. இந்த வீட்டை போலி டாக்குமென்ட் தயாரிச்சு வித்துட்டதா விஷயம் தெரிஞ்சுது. மீனா வாக்குவாதம் செய்யவும், இந்த சொத்தை வாங்கிய பார்ட்டி, போலீஸ் ஸ்டேஷன்ல மீனா மேல புகார் பண்ணிட்டாங்க. மனவளர்ச்சியில்லாத ஜெயப்பிரகாைஷ ஒரு ரூமில் வச்சு பூட்டிட்டாங்க. மீனா, ஐகோர்ட் மதுரை பெஞ்சுல, பெயிலுக்கு மூவ் பண்ணும் போது, தன்னோட கஸ்டடியில இருந்த ஜெயப்பிரகாைஷ பூட்டி வச்சுருக்கறதா தெரிவிச்சாங்க. கோர்ட் விசாரிக்க ஆரம்பிச்சுருச்சு. பையன் அந்த வீட்ல இல்லை. 25ஆயிரம் ரூபா கொடுத்து, ஒரு ேஹாம்ல சேர்த்து விட்ருக்காங்க. பெஞ்ச் தலையிட்டு, ஜெயப்பிரகாைஷ மீட்டு, அதே வீட்ல மீனாவோட பராமரிப்புல வளர்க்க உத்தரவிட்டாங்க. ஆனா, ஜெயப்பிரகாஷ்க்கும், அந்த வீட்டுக்கும் கார்டியனா, வக்கீல் ஆனந்தவள்ளி என்பவரை, கோர்ட் நியமிச்சுது. இந்த விஷயமெல்லாம் தெரிஞ்ச, வசந்தகுமாரோட 71 வயசு அக்கா பிரேமாவதி, தம்பியோட சொத்துக்களை அபகரிச்சுட்டதா ராஜேஸ்வரியோட மகன் செந்தில்குமார், மகள் மீனா, செந்தில்குமாருக்கு உதவிய மதுரை வக்கீல் சுலைமான் பாஷா, ப்ராப்பர்டி வாங்கிய வக்கீல்கள் மதுரை முத்துக்குமார், சென்னை புருேஷாத்தமன் உட்பட இன்னும் சிலர் மேல, ஐகோர்ட் பெஞ்சுல கேஸ் போட்டாங்க. இந்த வழக்கை பத்தி வக்கீல் ஆனந்தவள்ளி சொன்னது : ராஜேஸ்வரி உயிரோட இருந்தப்பவே, வசந்தகுமார், ராஜேஸ்வரியோட ஒரே வாரிசு தான் தானு, செந்தில்குமார் டாகுமென்ட் தயாரிச்சுருக்கார். ராஜேஸ்வரி இறக்கவும், அந்த போலி டாகுமென்டை வச்சு, சென்னையில் இருந்த 3 சொத்துக்களையும் வித்துட்டார். இதே முறையில தான் மதுரையில் ஜெயப்பிரகாஷ், மீனா குடியிருந்த வீட்டையும் வித்துருக்கார். விஷயமெல்லாம் தெரிஞ்சுகிட்ட மீனா, வித்த ப்ராப்பர்டில பங்கு கேட்டு, சகோதரன் செந்தில்குமாரோட கூட்டு சேர்ந்தாங்க. மீனா குற்றவாளியா இருந்தாலும் இப்போதைக்கு அதேவீட்ல ஜெயப்பிரகாஷ் ஐ பராமரிச்சுட்டு வர்றாங்க. அந்த பையனோட சொத்துக்களை மீட்கணும். நல்ல ஹோம்ல அவனை ஒப்படைக்கணும் என்றார். இந்த வழக்கை விசாரிச்ச நீதிபதி பி.என்.பிரகாஷ், எல்லோருடைய ஜாமின், முன்ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். மதுரை மற்றும் சென்னையில் சொத்துக்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்டதால, ஊமச்சிகுளம் போலீஸ்கிட்ட, சி.பி.சி.ஐடி.,போலீசுக்கு மாத்தி உத்தரவிட்டுள்ளார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தல புராணம்
தல புராணம் , இந்தியா. 23-ஜூலை-2020 | 23:13:09 IST Report Abuse

லஞ்சத்துக்கு வாரிசு சான்றிதழ் வழங்கிய அந்த நாய் தாசில்தாரை இதில் ஏன் குற்றவாளியா சேர்க்கல்லை? அங்கே ஆரம்பிக்குது வில்லங்கம்..அப்புறம் பத்திர பதிவு இத்யாதி.. லஞ்சம் லஞ்சம் லஞ்சம்.. தக்காளி கேட்டா ஆயாம்மா ஆட்சி ஆட்டுக்குட்டி ஆட்சின்னு ஏ 1 குற்றவாளியை காட்டும் கொள்ளைக்கூட்டம்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X