Advertisement

ரெஹானா பாத்திமா மீது 'போக்சோ' வழக்கு

பொது ஜூன் 25,2020 | 13:50 IST

Share

கேரளாவைச் சேர்ந்த 34 வயது ரெஹானா பாத்திமாவுக்கு ஆடைகளின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. 2018 ல் ஏகா என்ற படத்தில் ஆடையின்றி, மிக ஆபாசமாக அவர் நடித்த படத்தை, சென்சார் போர்டே தடை செய்தது. அதன் பின்னும் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தன்னை விளம்பரப்படுத்தி கொண்டிருக்கிறார். சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என, 2018 ல் தீர்ப்பு சொன்னதும், முந்திரிகொட்டை போல தனது தோழியும் பத்திரிகையாளருமான கவிதாவுடன், பாதுகாப்புடன் சபரிமலை பகுதிக்கு வந்தார். பக்தர்கள் அவர்களை ஓட ஓட விரட்டினர். பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும், பப்ளிசிட்டிக்காக, விபூதி அணிந்து கிளாமர் போஸில் போட்டோ வெளியிட்டார். இதனால், மத உணர்வுகளை புண்படுத்தி, துாண்டி விடுவதாக, கேரளாவில் பாத்திமா மீது வழக்கு பதிவானது. 153 இ பிரிவின் கீழ், கைது செய்யப்பட்டு 18 நாட்கள் ஜெயிலில் இருந்தார். வழக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இவரது அட்ராசிட்டியைப் பார்த்த பி.எஸ்.என்.எல். நிர்வாகம், கடந்த மே மாதம் பாத்திமாவை டிஸ்மிஸ் செய்தது. அவரது வீடியோக்களில் ஆடை துறப்பும், பெண் உடல் அமைப்பும் பற்றிய பேச்சுகள் தான் அதிகம். லேட்டஸ்ட்டாக மீன் கறி சமைக்கும் வீடியோவில் டாப்லெஸ் ஆக பின்பக்கம் போஸ் கொடுத்து விட்டு, துண்டால் மூடியபடி சமையல் செய்வார். இதுவரை தன்னைத் தானே பாலியல் ரீதியாக சித்தரித்த பாத்திமா, தனது பத்து வயதுக்குட்பட்ட இரு குழந்தைகளையும் பாலியல் ரீதியாக துாண்டியதால், பிரச்னைக்குள்ளானார். டவுசர் மட்டும் அணிந்தபடி, ஓய்வாக பாத்திமா படுத்திருக்கிறார். அவரது ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பாத்திமாவின் மார்பகத்தில் ஓவியம் வரைகின்றனர். பறவை, பூக்களை வைத்து குழந்தைகள் வரையும் ஓவியத்தை வேடிக்கை பார்க்கிறார். மறைச்சு மறைச்சு வைப்பதால் தான் உத்து உத்து பார்க்கின்றனர். செக்சும், பெண் உடல் பற்றிய விஷயங்களும் வீட்டிலேயே கற்றுத் தந்தால், சொஸைட்டியில் மாற்றம் ஏற்படும் என, விளக்கமும் கொடுத்துள்ளார். பாடிஆர்ட் அன்ட் பாலிடிக்ஸ் என்று தலைப்பில் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதற்கு கேரளாவில் அதிக எதிர்ப்பு கிளம்பியது. பத்திணம்திட்டா மாவட்ட பா.ஜ. பிரமுகரும் வழக்கறிஞருமான அருண் பிரகாஷ், திருவல்லா போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்த முழுமையான அறிக்கையை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென, பத்திணம்திட்டா மாவட்ட எஸ்.பி.க்கு, மாநில குழந்தைகள் உரிமை ஆணையமும் உத்தரவிட்டது. இதுகுறித்து திருவல்லா டி.எஸ்.பி ராஜப்பன் கூறுகையில், சைபர் குற்றத்தின் கீழும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது, பாத்திமா மீது, தகவல்தொழில்நுட்ப பிரிவு(IPC 67 OF IT ACT) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் (75 OF JUVENILE JUSTICE ACT), வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X