Advertisement

காளான் கோதுமை உருண்டை

சமையல் ராணி ஜூன் 27,2020 | 00:00 IST

Share

செய்முறை :- ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் ,வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி .அதில் நறுக்கிய காளான் சேர்த்து நிறம் மாறும் வரை,அதை வதக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதில் உப்பு, மிளகாய்தூள் ,சீரகத்தூள், மஞ்சள்தூள் ,கரம் மசாலா, சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொள்ளுங்கள். பிறகு கோதுமை மாவு தண்ணீரில் உப்பு சேர்த்து அது நன்றாக பினைந்துக் கொள்ளுங்கள். அதை வட்ட வடிவில் உருட்டி கொள்ளுங்கள். உருட்டிய மாவில் வதக்கிய காளானை வைத்து கொள்ளுங்கள். இரண்டு தேக்கரண்டி சோள மாவில் தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். உருட்டிய மாவினை சோள மாவில் முக்கி எடுத்து பிறகு பிரெட் கிரம்ச் இல் தடவிக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ,சூடான பிறகு ,காளான் உருண்டைகளை எண்ணெயில் போடுங்கள். நன்கு நிறம் மாறிய பிறகு, சூடான, சுவையான, ருசியான, காளான் உருண்டைகள் தயார்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X