Advertisement

திமுக குடும்பத்திற்குள் மோதல் முற்றுகிறதா

பொது ஜூன் 30,2020 | 14:47 IST

Share

துாத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழிக்கு தென்மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு உண்டு. ஸ்டெர்லைட் உட்பட துாத்துக்குடியில் என்ன பிரச்னை என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பவர் கனிமொழி. கடந்தவாரம் சாத்தான்குளம் போலீசார் கஸ்டடியில் தந்தை, மகன் இறந்ததற்கு, திமுக சார்பில் முதல் ஆளாக, டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். அதன்பிறகே திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதையடுத்து, இரண்டாம் முறையாக டுவிட்டரில் சம்பவம் குறித்து கருத்து பதிவிட்டார். இறந்தவர்களின் உடல்களை பெறுவதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு வந்த கனிமொழி, இறுதிச்சடங்கு வரை கூடவே இருந்தார். அவர் அணிந்திருந்த மாஸ்க்கில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற வாசகங்கள் இருந்தன. தொடர்ந்து வீட்டினருக்கு ஆறுதலும் கூறினார். அடுத்தநாள், திமுக சார்பில், 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியதாக, ஸ்டாலின் கடிதத்துடன், அந்த குடும்பத்தினரை சந்தித்தார். ஸ்டாலின் அண்ணன் பேசுறாரு… பேசுங்க என, ஜெயராஜ், பென்னிக்ஸ் மனைவியிடம் கனிமொழி போனை கொடுக்க, லைனில் இருந்த ஸ்டாலினும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதற்கடுத்து, திமுக சார்பில் இளைஞரணி தலைவர் உதயநிதி, ஞாயிறன்று துாத்துக்குடி வந்தார். அந்த குடும்பத்தினருடன் வீட்டுக்கு சென்று, தரையில் உட்கார்ந்து பேசினார். பத்திரிகையாளர்களை வெளியேறச் சொல்லிவிட்டு அவர்களுடன் சிறிது நேரம் பேசிச் சென்றார். திமுக உறுதுணையாக இருக்கும் என, ஸ்டாலின் சார்பில் உதயநிதி கூறியதாக, அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், உதயநிதி இ-பாஸ் எடுக்காமல் வந்தாரா என, சர்ச்சை எழுந்தது. சென்னை,விழுப்புரம், திருச்சி என டோல்கேட்களை தாண்டி வரும் போது, இ -பாஸ் இன்றி, அத்தனையையும் கடந்து செல்ல முடியாது. மேலும் அவர் வந்த காரின் முன்புறத்தில் இ பாஸ் இருந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து துாத்துக்குடி வருவதற்கு முன், சென்னையில் இ-பாஸ்க்கு விண்ணபிக்க வேண்டும். யார் பெயரில் வேண்டுமானாலும் இ - பாஸ் போடலாம். மூன்று பேர் காரில் வரலாம். யாரோ ஒருவர் போட்ட இ - பாஸில் உதயநிதியும் வந்திருக்கலாம் என்கின்றனர், கட்சியினர்


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

PRSwamy
PRSwamy , யூ.எஸ்.ஏ. 01-ஜூலை-2020 | 02:18:22 IST Report Abuse

மொத்தத்தில் எல்லாம் ஒரு வேஸ்ட். இவள் வந்து என்ன பண்ணப்போறா? இரண்டாம் அலைக்கற்றை ஊழலில் சிக்கின ராணி. வெட்கமேயில்லை.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X