Advertisement

கடலில் சுற்றி வளைக்கும் நாடுகள்

பொது ஜூலை 01,2020 | 22:55 IST

Share

உலகம் பூராவும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிகிட்டு இருக்கு. மக்களை காப்பாத்துறதுல நாடுகள் எல்லாம் கவனம் செலுத்திட்டு வருது. ஆனா சீனாவோ, இந்த சமயத்த பயன்படுத்தி, அண்டை நாடுகளோட எல்லைகளையும், கடல் பரப்புகளையும் ஆக்ரமிக்குற வேலைகள்ல மும்முரமா இறங்கியிருக்கு. அப்படித்தான், இந்தியாவோட லடாக் எல்லையிலும் அத்துமீறி எடத்த பிடிக்க பாதுக்குது. ரெண்டு நாட்டு படைகளும் எல்லைகள்ல குவிக்கப்பட்டு இருக்குற டென்ஷனுக்கு மத்தியில பேச்சுவார்த்தையும் நடந்துட்டு வருது. இங்க மட்டுமில்ல, சீனா தன்னோட தெற்கு, கிழக்குல இருக்குற பசிபிக் பெருங்கடல் பரப்புலயும் மத்த நாடுகளோட எல்லைகளை ஆக்ரமிக்குற வேலையை அதிகமாக்கியிருக்கு. இந்த சமயத்துலதான், இந்தியாவும், ஜப்பானும் சேந்து இந்திய பெருங்கடல், மலாக்கா நீரிணை பக்கத்துல மலபார் கூட்டு கடற்படை போர் பயிற்சியில ஈடுபட்டு இருக்காங்க. இந்தியாவோட INSராணா, INS குலிஷ் போர் கப்பல்களும், ஜப்பானோட ஷிமாயுகி, கஷிமா போர் கப்பல்களும் இந்த பயிற்சியில ஈடுபட்டு இருக்கு. இது, வழக்கமான பயிற்சினாலும், எப்பவும் போல, முன் அறிவிப்பு எதுவும் இல்லாம நடந்திருக்கு. இந்த இக்கட்டான சூழல்ல, போர் பயிற்சி நடத்துனது, சீனாவுக்கு, ஒரு எச்சரிக்கை கொடுக்குறதுக்குன்னுதான் சொல்லப்படுது. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான், ஜப்பான், அமெரிக்காவோட சேந்து, கிழக்கு பசிபிக் பெருங்கடல்ல கூட்டு கடற்படை போர் பயிற்சியில ஈடுபட்டிருக்கு. இதுக்காகவே கொண்டுவரப்பட்ட, அமெரிக்காவோட ரொனால்டு ரீகன், தியோடார் ரூசெவல்ட், நிமிட்ஸ் (Ronald Reagan, Theodore Roosevelt, Nimitz) அதிநவீன போர் கப்பளுங்க இப்போ பசிபிக் பெருங்கடல்ல நிறுத்தப்பட்டு இருக்கு.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X