Advertisement

வேகம் பிடிக்கிறது சாத்தான்குளம் வழக்கு

பொது ஜூலை 02,2020 | 09:58 IST

Share

தூத்துக்குடி, சாத்தான்குளம் ஜெயராஜ்,பெனிக்ஸ் மரண வழக்கில், சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர். சம்பவம் தொடர்பான 2 எப்.ஐ.ஆரிலும் காவலில் உயிரிழப்பு என்று இருந்ததை பிரிவு 302-ன் கீழ் கொலைவழக்காக மாற்றி 4 போலீசார் மீது வழக்கு பதிவு செய்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த எஸ்.ஐ. ரகு கணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். கங்கைகொண்டான் செல்லும் வழியில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை வழிமறித்து விசாரணைக்கு கூட்டி சென்ற சிபிசிஐடி போலீசார், அவரையும் கைது செய்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X