Advertisement

லடாக்கில் பிரதமர்

பொது ஜூலை 03,2020 | 15:57 IST

Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை லடாக் சென்றார். கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லேஹ் விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கினார். லேஹ் மிக சிறிய அழகான ஊர். அதன் கிழக்கே சீன எல்லையும் வடக்கே பாகிஸ்தான் எல்லையும் உள்ளன. சீனா எல்லை தாண்டி வந்து படைகளை குவித்துள்ளது. பாகிஸ்தானும் அதன் ஸ்கார்டு விமான படை தளத்தில் போர் விமான்ங்களை தயார் நிலையில் வைத்துள்ளது. கார்கில் போரின்போது லேஹ் ஏர்போர்ட் பரபரப்பாக இருந்த்து. அதன் பிறகு இப்போது அந்த பனி பூமியில் யுத்த வெப்பம் மூண்டுள்ளது. எல்லையில் சீனர்களின் கொலை வெறி தாக்குதலில் காயம் அடைந்த ஜவான்களை பிரதமர் சந்திக்க இருக்கிறார். நாட்டுக்காக உயிரை கொடுக்க தயாராக அங்கு எல்லையில் நிற்கும் ஜவான்களையும் சந்தித்து பேசுகிறார். “135 கோடி இந்தியர்கள் உங்கள் பின்னால் நிற்கிறார்கள்!” என்று பிரதமர் சொல்லப் போகும் வார்த்தைகளை கேட்க ஜவான்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X