Advertisement

ம.பி அரசியலை கலக்கும் புலி! மாஜி காங்கிரஸ் தலைவர்கள் கிலி!

அரசியல் ஜூலை 04,2020 | 10:55 IST

Share

கொரோனா வந்ததுல இருந்து தமிழ்நாட்ல பல அரசியல் தலைவர்கள் வெளில தல காட்டல. சூடா வாரம் ஒரு அறிக்கை, ஒரு பேட்டி குடுத்துட்டு இருந்தவங்க சைலன்ட் ஆய்ட்டாங்க. அதனால மீம்ஸ்காரங்க வேலை இல்லாம போய்ட்டாங்க. அமைச்சர்கள் அறிக்கைக்கு எப்பவுமே மார்க்கெட் வேல்யு கம்மி. ஸ்டாலின் அறிக்கைகள் ஒண்ணு படிச்சு முடிக்றதுக்குள்ள அடுத்தது வந்து விழுந்து கிட்டே இருக்கு. அதனால அவருக்கும் அட்ராக்சன் மங்கி போச்சு. ஆனா, மங்குணி அரசியல்னு கேலி கிண்டலுக்கு ஆளான மத்ய பிரதேச பாலிடிக்ஸ் இப்ப மசாலா ஏத்த ஆரமிச்சிருக்கு. காங்ரஸ்ல இருந்து விலகி பிஜேபில சேந்த ராஜகுமாரன்தான் இதுக்கு காரணம். மாதவராவ் சிந்தியா தன்னோட ஆளுகள கூட்டிகிட்டு வெளிய போனதால சீயெம் கமல்நாத் அரசாங்கம் கவுந்திருச்சு. பிஜேபி சிவராஜ் சவ்ஹான் மறுபடி சீயெம் ஆனாரு. காங்கிரஸ் முதுகுல குத்தின தன்னோட ஆளுகளுக்கு மினிஸ்டர் போஸ்ட் குடுன்னு ஒத்தக்கால்ல நின்னு அதுல ஜெயிச்சிட்டாரு சிந்தியா. 19 பேருக்கு பதவி குடுத்திட்டாரு சவ்ஹான். இதனால சிந்தியா தெம்பாய்ட்டாரு.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Abi
Abi , இந்தியா. 13-ஜூலை-2020 | 13:22:13 IST Report Abuse

hee

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X