Advertisement

நிஜ போலீஸ் போல கெத்து காட்டுகின்றனர்

பொது ஜூலை 05,2020 | 16:56 IST

Share

அரசு பதவியில்லை; அதிகாரம் இல்லை; ஒரு ரூபா கூட சம்பளம் இல்லை; வெறும் ஐ.டி கார்டு மட்டும் தருவாங்க. படிப்பு தகுதி வேணாம்; கொஞ்சம் பிட்னஸ் இருந்தா போதும். ஆனாலும், போலீஸ் போல, கெத்து காட்டலாம். இந்த எண்ணத்தில், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குரூப்பில் சேருவோர் அதிகம். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 1993ல் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து, காவல்துறை மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது இவர்களின் வேலை. குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்த குழுக்கள் அமைக்கப்பட்டன. தற்போதைய ரெகார்டு படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 150 பேர், இந்த குழுவில் இருப்பார்கள். தேவைக்கேற்ப, அந்தந்த மாவட்ட எஸ்.பி., சிட்டி போலீஸ் தேவைக்கேற்ப, ஆட்களை தேர்வு செய்வர். சம்பளம் கிடையாது என்றாலும், போலீஸ் உடனான பணி என்ற ஆசையில், கிராமத்து இளைஞர்கள் அதிகளவில் இக்குழுவில் இணைந்துள்ளனர். திருவிழாக்களின் போது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, ரோந்தின் போது, போலீசார் உடன் செல்வது, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் போலீசார் ஈடுபடுத்துகின்றனர். போலீசார் சொல்லும் இடத்திற்கு சென்று இந்த வேலையை செய்ய வேண்டும். போலீசார் மக்களோடு நட்பு பாராட்டுவதற்கு இவர்களை பயன்படுத்த வேண்டும். ஆனால், இவர்களோடு அதிக நட்பு பாராட்டி, பொதுமக்களிடம் இருந்து விலகியே நிற்கின்றனர். இந்த வாய்ப்பை இவர்கள் பயன்படுத்தி கொண்டு, அதிகாரத்தை கையில் எடுத்துள்ளனர். வாகனங்களை செக் பண்ணும் போது போலீசார், அதிகமாக இவர்களை பயன்படுத்துகின்றனர். போலீசார் பற்றாக்குறை என்பதும் ஒரு காரணம் தான். எஸ்.ஐ. அபராத சீட்டு எழுதும் போது, ரோட்டில் செல்பவர்களை யார் நிறுத்துவது? பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் தான். எஸ்.ஐ ரோட்டோரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்து, அபராதம் விதித்துக் கொண்டிருப்பார். இவர்கள், கையில் லத்தியை பிடித்து கொண்டு, வாகன ஓட்டிகளை மறித்து, எஸ்.ஐ இடம் அனுப்புவர். சில நேரங்களில் கம்பை ஓங்குவதும் உண்டு. வாகன ஓட்டிகளை ஏய் என, அழைப்பது, வயதானவர்களை… பெருசு… வா… போ.. என ஒருமையில் அழைப்பதும் இவர்களின் ஸ்டைல். இதையெல்லாம் எஸ்.ஐ கண்டும் காணாமல் விட்டு விடுவார். ஏனென்றால், அவருக்கு வேலை ஆக வேண்டும். இன்னும் சில இடங்களில் போலீசார் லஞ்சம் வாங்குவதற்கும் இவர்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X