Advertisement

திமுகவின் சமூக நீதிக்கு அடையாளமா?

பொது ஜூலை 06,2020 | 11:58 IST

Share

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள தடுப்பணை மழையால் சேதம் அடைந்த்து. எம்.எல்.ஏ வில்வநாதன் அதை பார்க்க போனார். தண்ணீரை தாண்ட வேண்டிய இடத்தில் செருப்பை கழற்றி போட்டார். வெறும் காலில் நடந்தார். திமுகவின் வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர் அந்த செருப்பை கையில் துாக்கி சென்றார். இந்த வீடியோவை பார்த்த பலரும், 'தலித் என்பதால் செருப்பை சுமக்க வைத்து விட்டார் எம்.எல்.ஏ. இதுதான் சமூக நீதி பேசும், தி.மு.க.வின் உண்மை முகம்' என்று விமர்சன்ம் செய்தனர். செருப்பு சுமந்த சங்கர் அதை மறுக்கிறார். “வில்வநாதன் எம்.எல்.ஏ மட்டும் அல்ல. பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர். என் மனைவி அனிதா ஒன்றிய துணை செயலாளர். எனவே, எப்போதும் வில்வநாதனுடன் இருப்பேன். சாலை சேறும் சகதியுமாக இருந்ததால், செருப்பை கழற்றி போட்டு நடந்தார். முள் குத்துமெ என்பதற்காக நான்தான் அவர் செருப்பை எடுத்து சென்றேன். நான் தலித் என்பதால் என்னை வைத்து எம்.எல்.ஏ.யை தாக்குகிறார்கள்” என்றார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

ஆரூர் ரங்
ஆரூர் ரங் , . 06-ஜூலை-2020 | 13:58:52 IST Report Abuse

மூலப் பத்திரத்தில் தலித் நிலம்னு இருந்தும் ஆட்டயப் போடலையா என்ன ? . அது 1950 நவீன சமூக நீதி

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X