Advertisement

கூடுதல் சம்பளம் தருவதாக அழைப்பு

பொது ஜூலை 06,2020 | 13:58 IST

Share

சொந்த ஊர்களுக்கு திரும்பிய வெளிமாநில தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு நகரங்களை நோக்கி புறப்பட்ட துவங்கியுள்ளனர். உத்தர பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்காக காத்திருந்தவர்கள் , நேற்று இரவே பஸ் நிலையங்களுக்கு சென்று விட்டனர். காலை தளர்வுகள் அமலுக்கு வந்த பிறகு,முதல் பஸ்சில் புறப்பட்டனர் . இழந்த வேலை மறுபடியும் கிடைத்தது. முதலாளி வரச்சொன்னார். டெல்லிக்கு போகிறேன். என ஒரு தொழிலாளி சொன்னார். பஞ்சாப்புக்கு புறப்பட்ட ஒருவர் அங்கு சென்று தான் வேலை தேட போவதாக கூறினார். தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியதால், தொழில் நிறுவனங்களின் பணிகள் முடக்கப்பட்டது. கூடுதல் சம்பளம் , சாப்பாடு ,பயண செலவு எல்லாம் கொடுபோம். வேண்டுமென்றால் வீட்டுக்கே வண்டி அனுப்புறோம் . பயப்படாம வாங்க என தொழிலாளர்களை முதலாளிகள் அழைக்க துவங்கியுள்ளனர். சொந்த ஊரில் நிலம் வைத்திருக்கும் ஒரு சிலர் விவசாயம் செய்கின்றனர். ஊருக்குள் வேலை செய்தும் பிழைக்கின்றனர். ஆனால் பலருக்கு சேமிப்பு இல்லை, வருமானம் இல்லை, பஞ்சத்தில் வாடுவதை விட முதலாளிகள் தரும் ஆப்பரை ஏற்காலம் என பலர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X