Advertisement

சட்டீஸ்கர் அரசு அறிவிப்பு

பொது ஜூலை 06,2020 | 14:58 IST

Share

பசுவின் சாணத்தை கிலோ 1 ரூபாய் 50 பைசா விலையில் அரசு கொள்முதல் செய்யும் என சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்தார். 'கோ தான் நியாய் யோஜனா' என்று இந்த திட்டத்துக்கு பெயர். விவசாயிகளிடம் சாணம் வாங்கி, அதில் மண் புழு விட்டு உரம் தயாரித்து, அதை கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்வது திட்டத்தின் நோக்கம். 20 ம் தேதி இது அமலுக்கு வருகிறது. ”பால் தருவதை நிறுத்தியதும் பசுக்களை மக்கள் கைவிடுகின்றனர். அவை வயலில் மேய்வதால் பயிர் பாழாகிறது. சாலையில் நடமாடுவதால் விபத்து நடக்கிறது. கண்ட இடத்தில் சாணம் போடுவதால் மக்கள் நடமாட இடைஞ்சல் ஏற்படுகிறது. இந்த திட்டம் அதற்கு முடிவு கட்டும்” என்கிறார் விவசாய அமைச்சர். காங்கிரஸ் அரசாங்கம் பசு அரசியலுக்கு வருகிறதே? என்று பிஜேபிக்கு அதிர்ச்சி. ”பசு சாணத்தை விவசாயிகள் விற்க மாட்டார்கள். விற்பவர்கள் எருமை சாணம், காளை சாணம் கலந்து கொடுத்தால் அரசு எப்படி பிரித்து வாங்கும்?” என்று கேட்கிறது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Raghunathan Nagarajan Ragu Naga
Raghunathan Nagarajan Ragu Naga , யூ.எஸ்.ஏ. 06-ஜூலை-2020 | 16:56:44 IST Report Abuse

மிகவும் அருமையான திட்டம். இதுபோல மற்ற மாநிலங்களிலும் செயல் படுத்தி விவசாயிகளின் வருமானத்தை பெருக்கலாம். விவசாயிகளுக்கு இனாமாக பணத்தை கொடுப்பதைவிட இந்த திட்டம் மிக சிறந்தது.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X