Advertisement

மதுரை அரசு மருத்துவமனை சாதனை

பொது ஜூலை 24,2020 | 21:58 IST

Share

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயிலிருந்து மீண்ட 14 பேரை, கவுன்சிலிங் செய்து, பிளாஸ்மா தானம் செய்வதற்கு சம்மதிக்க வைத்து சாதனை படைத்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனை, கேர் சென்டர், தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டுத் தனிமையில் 2 ஆயிரத்து 661 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6 ஆயிரத்து 448 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதில் 4000 பேருக்கு மேல் பிளாஸ்மா தானம் செய்ய தகுதியானவர்கள் என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா நோயிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆன, 14 நாட்கள் கழித்து ஒருவர் பிளாஸ்மா தானம் செய்யலாம். இருதய நோய் உட்பட பிற நோய்கள் இல்லாத 18 முதல் 65 வயதுள்ளவர்கள் முன்வரலாம்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

THINAKAREN KARAMANI
THINAKAREN KARAMANI , இந்தியா. 24-ஜூலை-2020 | 23:24:34 IST Report Abuse

கொரோனா நோயிலிருந்து மீண்ட 14 பேரை, கவுன்சிலிங் செய்து, பிளாஸ்மா தானம் செய்வதற்கு சம்மதிக்க வைத்த அந்த அதிகாரிகளைப் பாராட்டுகிறேன். மேலும் பிளாஸ்மா தானம் செய்வதற்கு சம்மதித்த அந்த 14 பேருக்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X