Advertisement

மம்தா விஷமத்தனம்; பா.ஜ. தாக்கு

பொது ஆகஸ்ட் 03,2020 | 18:57 IST

Share

யோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி பூமி பூஜையுடன் 5ம்தேதி துவங்குகிறது. இதனால் நாடு முழுக்க இந்துக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள வேளையில் மேற்கு வங்க மாநிலத்தில் அன்றைய தினம் முழு ஊரடங்கை மம்தா பானர்ஜி அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாநில பா.ஜ. தலைவர் திலிப் கோஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக ஆகஸ்ட் ஐந்தாம் தேதி கருதப்படுகிறது. அந்த நாளில் முழு ஊரடங்கு அறிவிப்பது, மம்தா அரசின் மோசமான புத்தியை காட்டுகிறது; இது, இந்துக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் உள்ளது. ராமர் கோயிலுக்கு பூமி பூஜை போடும் நாளை மக்கள் கொண்டாடுவதற்கு அரசே தடை போடுவது சரியல்ல; எனவே, 5ம்தேதி முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்; இல்லாவிட்டால் அதற்கான விளைவுகளை மம்தா சந்திக்க வேண்டியிருக்கும் என்று திலிப் கோஷ் கூறினார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

சிவம்
சிவம் , . 03-ஆக-2020 | 19:13:29 IST Report Abuse

சூர்ப்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அறுந்தது போன்று, மமதையும் அமிட்ஷாவிடம் மூக்குடைப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. நம் மொத்த இந்தியாவில், மாநிலத்திற்கு 3 - 4 தேச துரோக அல்லது இந்து எதிர்ப்பு அல்லது மோடி எதிர்ப்பு என்று அல்லது வெளிநாட்டு சொம்புகள் உள்ளன. மொத்தமாக 50 க்கும் குறைவே. இந்த தலைகளை ஏதாவது வழக்கில் ஒரு 10 வருடம் ஜாமினில் வெளியே வரமுடியாத படி உள்ளே தள்ளிவிட்டால், அப்புறம் இந்தியா ஜெட் வேகத்தில் முன்னேற துவங்கிவிடும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X