Advertisement

அரசிடம் விவசாயிகள் எதிர்பார்க்கும் உறுதிமொழிகள்

சிறப்பு தொகுப்புகள் செப்டம்பர் 20,2020 | 08:50 IST

Share

விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கவும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் வழிவகுக்கும் மூன்று மசோதாக்களை மத்திய அரசு லோக்சபாவில் நிறைவேற்றியுள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதா, விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா, அத்தியாவசிய பொருள் திருத்தச் சட்ட மசோதா ஆகியவைதான் அந்த மூன்று மசோதாக்கள். விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இம்மசோதாக்கள் தாரை வார்த்துவிடும் என சொல்லி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. மூன்று மசோதாக்களால் ஏற்படும் சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன? விவசாயிகள் பட்டியலிடுகின்றனர். விவசாயி தனது விளைபொருட்களை நாட்டின் எந்த பகுதியிலுள்ள வியாபாரிக்கும் விற்க முடியும். அதன்மூலம் அதிக விலை கிடைக்கும்; இடைத்தரகர்கள் ஒழிவார்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X