Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 21-09-2020 | Cinema News Roundup | Dinamalar Video

சினிமா வீடியோ செப்டம்பர் 21,2020 | 07:30 IST

Share

பிசாசு 2வில் ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில், நாகா, பிரயாகா மார்ட்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'பிசாசு 2'. இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. மிஷ்கினே இயக்க, ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். சைக்கோ படத்தில் வில்லனாக நடித்த பிச்சுமணி இதிலும் வில்லனாக நடிக்கிறார். முதல்பாகத்தை விட அதிக திகிலுடன் தயாராகும் இப்படம் மலை கிராமத்தில் நடப்பது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மதம் மாறினாரா சஞ்சனா கல்ராணி? நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும், நடிகையுமான சஞ்சனா கல்ராணி, போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது. அதனால் அவரை பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் சஞ்சனா, முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டதாக செய்தி ஒன்று ஒரு கடித ஆதாரத்துடன் மீடியாவில் பரவி வருகிறது. 2018ல் அவர் மதம் மாறி தன் பெயரை மஹிரா என்று மாற்றிக் கொண்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சஞ்சனாவின் சொத்து விவகாரம், அவரது நடவடிக்கைகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அந்தாதூன் ரீ-மேக்கில் தமன்னா ஹிந்தியில் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படம் தென்னிந்திய மொழிகளில் ரீ-மேக்காகிறது. தமிழில் பிரசாந்த் நடிக்க உள்ள நிலையில் இப்போது தெலுங்கு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆயுஷ்மான் குரானா வேடத்தில் நிதினும், தபு வேடத்தில் தமன்னாவும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்கிறார்கள். மெர்லபகா காந்தி இயக்குகிறார். மஹதி சுவரா சாகர் இசையமைக்கிறார். நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X