சமையல் ராணி செப்டம்பர் 26,2020 | 00:00 IST
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அடுப்பில் வைக்கவும். முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்து எடுத்து, தனியே வைக்கவும். வெந்த சாதத்தைப் போடவும். நன்றாகக் குழைந்து இருந்தால் அதில் வெல்லத்தைப் போட்டு விடலாம். இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர்/ பால் விட்டுக் கிளறினால் குழைந்து விடும். இப்போது வெல்லம் போட்டுக் கிளறவும். கல், மண் இருக்கும் என்று நினைத்தால் அப்படியே போடாமல் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்ததும் எடுத்து வடிகட்டி விடவும். முதலில் நீர்த்துப் போனது போல இருந்தாலும் அடுப்பில் வைத்துக் கிளறினால் கெட்டியாகி விடும். இப்போது ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைப் போட்டுக் கிளறி இறக்கவும். கொஞ்சம் ஆறியவுடன் மீதி நெய்யை விடவும். சூடாக இருக்கும் போது விட்டால் எவ்வளவு விட்டாலும் உள்வாங்கிக் கொண்டு விடும். நெய் விட்ட மாதிரியே இருக்காது. இப்போது சுவையான குதிரைவாலி அரிசி ஸ்வீட் பொங்கல் ரெடி!!
வாசகர் கருத்து