Advertisement

இளம்பெண் உஷாரானதால் திருட்டுத்தனம் அம்பலம்

சம்பவம் செப்டம்பர் 28,2020 | 21:25 IST

Share

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். DYFI. திருவனந்தபுரத்தில் உள்ள செங்கம் CHENKAM பகுதியின் DYFI தலைவராக இருக்கும் ஷாலு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள கோவிட் கேர் சென்டரில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அதே சென்டரில் சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண் பாத்ரூமுக்கு சென்றார். குளித்துக் கொண்டிருந்த அவர், ஜன்னல் கம்பியில் ஒரு மொபைல் போன் நிற்க வைக்கப்பட்டிருப்பதை கண்டார். அதை எடுத்துப்பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார். தான் குளிக்கும் காட்சிகள் அதில் இருந்தது. யாரோ திட்டம் போட்டு போனை வைத்து விட்டுச் சென்றிருப்பதை உணர்ந்தார். போலீசாரிடம் அந்தப் பெண் புகார் செய்தார். மொபைல் ஷாலுவுக்கு சொந்தமானது என்பதால் அவரிடம் விசாரிக்கப்பட்டது. மொபைலை பயன்படுத்தி படம்பிடித்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு டெஸ்ட் எடுத்தபோது மீண்டும் பாசிடிவ் என ரிசல்ட் வந்ததால் கோவிட் கேர் சென்டரில் தனிமைப்படுத்தப்பட்டார். கோவிட் கேர் சென்டரிலும் டிஒய்எப்ஐ நிர்வாகி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது மார்க்சிஸ்ட் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

J.V. Iyer
J.V. Iyer , சிங்கப்பூர். 29-செப்-2020 | 04:00:42 IST Report Abuse

இப்படிப்பட்டவர்கள் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் உணரவேண்டும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X