சினிமா வீடியோ செப்டம்பர் 30,2020 | 07:25 IST
ஓடிடியில் பூமி? 'ரோமியோ ஜூலியட்,' 'போகன்' ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பூமி. தனது 25-வது படமான இதில் விவசாயியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி. கடந்த மே மாதமே ரிலீசுக்கு தயாரானா பூமி படத்தை, ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. அதனால் இப்படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது. 'இந்தியன் 2' - புதிய சிக்கல் ? லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்க உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. 2019, ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கியது. தயாரிப்பாளர் மாற்றம், மேக்கப் பிரச்னை, படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, கொரோனா பிரச்னை என பல இடையூறுகளை சந்தித்தது. அடுத்து படப்பிடிப்பு எப்போது நடக்கும் என தெரியவில்லை. கமல்ஹாசன் அதற்குள் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை அறிவித்துவிட்டார். இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங், போதைப் பொருள் வழக்கு விவகாரத்தில் சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் கைது கூட ஆக வாய்ப்புண்டு. அதனால், 'இந்தியன் 2' படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்தில் படத்தை ஆரம்பித்தார்களோ, சிக்கல் மேல் சிக்கலாக வந்து கொண்டிருக்கிறது.
வாசகர் கருத்து