Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 02-10-2020 | Cinema News Roundup | Dinamalar Video

சினிமா வீடியோ அக்டோபர் 02,2020 | 07:25 IST

Share

“பாவ கதைகள்” - அடுத்த ஆந்தாலஜி வகை படம் ஒரே படத்தில் இரண்டு மூன்று கதைகளை இணைத்து உருவாக்குவது ஆந்தாலஜி வகை படம் என்பவர். இந்த வகை படங்கள் அதிகமாகி வருகின்றன. அமேசான் பிரைம், 5 இயக்குனர்களை கொண்டு 'புத்தம் புது காலை' என்ற படத்தை வெளியிடுவதாக நேற்று அறிவித்தது. அடுத்து நெட்பிளிக்ஸ் “பாவ கதைகள்” என்ற படத்தை வெளியிடுகிறது. இதை கவுதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் இயக்குகின்றனர். இதில் அஞ்சலி, பவானிஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காதல், அந்தஸ்து, கவுரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை கொண்டு இப்படம் தயாராகிறது. நட்டியின் 'இன்ஃபினிட்டி' மென்பனி புரோடக்ஷன்ஸ் மற்றும் ழகரலயா பிலிம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு 'இன்ஃபினிட்டி' என பெயரிடப்பட்டுள்ளனர். “நட்டி” எனும் நட்ராஜ் சுப்ரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். வித்யா பிரதீப், முனிஸ்காந்த், மெட்ராஸ் சார்லஸ் வினோத், முருகானந்தம், ராட்சசன் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். வித்தியாசமான கதை களம் கொண்ட இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது. அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் எழுதி இயக்குகிறார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X