சினிமா வீடியோ அக்டோபர் 03,2020 | 07:25 IST
நயன்தாரா வேடத்தில் ஸ்ரீதேவி மகள் 2018ல் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'கோலமாவு கோகிலா'. இப்படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது. இதில் நயன்தாரா நடித்த வேடத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். புதியவர் சித்தார்த் சென் குப்தா இயக்குகிறார். தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தயாரிக்கிறார். ஹந்திக்கு ஏற்றமாதிரி படத்தின் கதையில் சில மாற்றங்களை கதாசிரியர் பங்கஜ் மேத்தா செய்கிறார். தெலுங்கில் நுழைந்த புருவ அழகி ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் தன் புருவ சிமிட்டலால் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்துள்ளார். கன்னடத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அடுத்து தெலுங்கிலும் நுழைந்துள்ளார். நடிகர் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் பிரியா நடிக்கிறார். இதில் இன்னொரு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கிறார். மோகன்லாலை வைத்து மனமந்தா எனும் தெலுங்கு படத்தை இயக்கிய சந்திரசேகர் ஏலேட்டி இயக்குகிறார்
வாசகர் கருத்து