சினிமா வீடியோ அக்டோபர் 04,2020 | 07:25 IST
லேசான வெளிச்சத்தில்… 'துருவ நட்சத்திரம்' - கவுதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஜ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் நடிக்க உருவான படம் 'துருவ நட்சத்திரம்'. படம் ஆரம்பிக்கும் முன்பே டீசரை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர் மூன்றாண்டாகியும் படம் வெளிவரவில்லை. கவுதமிற்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்னையால் படம் முடங்கியது. இப்போது ஓரளவுக்கு அதை சரி செய்துவிட்டார். அதனால் இப்படத்திற்கு லேசான வெளிச்சம் கிடைத்துள்ளது. இப்படத்திலிருந்து 'ஒரு மனம்' என்ற பாடலை விரைவில் வெளியிடுவதாக கவுதம் அறிவித்துள்ளார். அதோடு, “ஒரு சிறிய படி அல்லது ஒரு பெரிய பாய்ச்சல்' என தெரிவித்துள்ளார். 200 கி.மீ நடந்து வந்த ரசிகரை சந்தித்த அல்லு அர்ஜுன் தெலுங்குத் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நாகேஸ்வர் ராவ் என்ற இவரின் தீவிர ரசிகர் ஒருவர் மாசெர்லா என்ற இடத்திலிருந்து ஐதராபாத் வரை 200 கி.மீ நடந்தே வந்து இவரை பார்த்துள்ளார். “நான் அல்லு அர்ஜுனின் ரசிகன். நான்கைந்து முறை அவரைச் சந்திக்க முயற்சித்தேன், ஆனால் நடக்கவில்லை. இப்படி ஒரு பாத யாத்திரை நடத்தினால் அவர் கவனத்தை ஈர்க்க முடியும் என நினைத்தேன். எனது முயற்சி வெற்றி பெற்றது என மகிழ்ச்சி'' தெரிவித்துள்ளார் நாகேஸ்வர் ராவ்.
வாசகர் கருத்து