விளையாட்டு அக்டோபர் 06,2020 | 06:55 IST
பெங்களூரு அணி தோல்வி ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு, ஸ்ரேயாசின் டில்லி அணிகள் மோதின. டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டும் எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கோஹ்லி அதிகபட்சம் 43 ரன் எடுத்தார். டில்லி அணியின் ரபாடா, 4 விக்கெட் வீழ்த்தினார்.
வாசகர் கருத்து