Advertisement

ஸ்ரீஜனுக்கு கைகொடுத்த டைபிரேக்கர் பாலிசி

பொது அக்டோபர் 17,2020 | 22:30 IST

Share

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஒடிசா மாணவர் சோயப் அஃப்தாப் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து, தேசிய அளவில் முதல் ரேங்க்கை பிடித்து சாதனை படைத்தார். சோயப்பை போலவே 720க்கு 720 மதிப்பெண் எடுத்த டில்லி மாணவி ஆகான்ஷா சிங்குக்கு 2வது ரேங்க்தான் கிடைத்தது. நீட் தேர்வில் ஒரே மதிப்பெண்ணை இருவர் எடுக்கும் பட்சத்தில் டைபிரேக்கர் பாலிசி கடைப்பிடிக்கப்படும். அதாவது, உயிரியல் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் நபருக்கு ரேங்க்கில் முன்னுரிமை வழங்கப்படும். அப்படியும் சமநிலை நீடித்தால் வேதியியல் மதிப்பெண்ணை பார்ப்பார்கள். அப்படியும் சமநிலையே தொடர்ந்தால், எல்லா பாடங்களிலும் சேர்த்து குறைந்த எண்ணிக்கையில் தவறான விடை எழுதிய நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X